18 வருடங்களில் ஸ்பெயின் நாட்டின் பரப்பளவை விட அதிகளவில் அமேசன் காடுகள் அழிப்பு!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

காடுகள் இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைகளில் ஒன்று. ஆனால் மனிதர்களின் தேவை பெருகப் பெருக காடுகள் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டன. 

தென் அமெரிக்கா கண்டத்திலுள்ள பிரேசில், பெரு, வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா, ஈக்வடோர், கயானா ஆகிய நாடுகளில் அமேசன் மழைக்காடுகள் பரவியுள்ளது.

ஆனாலும், அமேசனின் பெரும்பகுதி பிரேசில் நாட்டில் தான் உள்ளது. அதிகளவில் ஒக்சிஜனையும் மழைப்பொழிவையும் தரும் அமேசன் காடுகள் உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.

அமேசன் மழைக்காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த வருடம் மிகப்பெரியளவில் காட்டுத் தீ ஏற்பட்டது. இது உலக நாடுகளையே கவலையடைய செய்தது. இந்தக் காட்டுத்தீயில் சிக்கி பல்லாயிரக்கணக்கான அரியவகை வன உயிரினங்கள், மரங்கள் ஆகியவை அழிந்தன.

அமேசன் மழைக்காடுகளின் பெரும் பகுதி பிரேசிலில் இருக்கும் நிலையில், பிரேசில் ஜனாதிபதி போல்சனரோ ( Bolsonaro ) தலைமையிலான அரசாங்கம் , காட்டை பாதுகாக்க தவறிவிட்டதாகவும், காட்டழிப்பை ஊக்குவிப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், 2000ம் ஆண்டிலிருந்து 2018ம் ஆண்டு வரையிலான 18 வருடங்களில் அமேசனில் காடுகள் எவ்வளவு அழிக்கப்பட்டுள்ளதென்ற புள்ளிவிவரங்களை Amazon Geo-Referenced Socio-Environmental Information Network என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி 2000ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டுவரை மொத்தமாக 5 லட்சத்து 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு அமேசன் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. இவை காட்டுத்தீ, மனிதர்களால் மேற்கொள்ளப்படும் காடுகள் அழிப்பு நடவடிக்கை ஆகியவற்றால் நிகழ்ந்துள்ளது.

5 லட்சத்து 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் என்பது ஸ்பெயின் நாட்டின் மொத்த பரப்பளவை விட அதிகமாகும். ஸ்பெயினின் மொத்த பரப்பளவு 5 லட்சத்து 5 ஆயிரத்து 990 கிலோமீட்டர்கள் ஆகும்.

2000 முதல் 2018ம் ஆண்டு வரையிலான 18 வருடங்களில் அமேசன் காடுகளின் மொத்த பரப்பளவில் 8% அழிக்கப்பட்டுள்ளது என்பது
தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :