கொவிட் 19 தொற்றிலிருந்து ஊடகவியலாளர்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான முகக்கவசம் மற்றும் கிருமி தொற்று நீக்கி மற்றும் மேலங்கி போன்றன வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(1) திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் முப்பது ஊடகவியலாளர்களுக்கு கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
இதில் முகக்கவசம்,கிருமிதொற்று நீக்கி மற்றும் மேலங்கி போன்றனவும் கையளிக்கப்பட்டன.
இவ் உபகரணங்களை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரளா கலந்து கொண்டு கையளித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், மற்றும் ஏ.எச்.ச்ஆர்.சி.நிறுவன பணிப்பாளர் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment