காரைதீவு நிருபர் சகா-
தனிமைப்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளச்சேனை ஆகிய பிரதேசங்களில் இருந்து வருகை தரும் தனியார் மற்றும் அரச உத்தியோர்த்தர்கள் திருக்கோவில் பிரதேச எல்லையில் பிசிஆர் அல்லது அன்ரிஜன் பரிசோதனை செய்து கொவிட்19 தொற்று இல்லை என்ற சான்றிதழ் உடன் வரவேண்டும்.
இத்தீர்மானம் திருக்கோவில் பிரதேச கொவிட்19 செயலணிக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
அக்கரைபற்று பிரதேசத்தில் கொவிட்19 தொற்று சடுதியாக அதிகரித்ததை தொடந்து திருக்கோவில் கொவிட்19 தடுப்புச் செயலணியின் முன்னெச்சரிக்கை பொதுக்கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
கூட்டத்தில் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆ.அனோஜாஇ திருகோவில் பிரதேச செயலக நிருவாக கிராம சேவை உத்தியோர்த்தர் திருமதி.பரிமளவாணி சில்வஸ்டர் திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் எஸ்.சத்தியசிலன் திருக்கோவில் ஆதார வைத்திய சாலையின் வைத்திய ஆத்தியட்சகரும் பதில;
சுகாதாரவைத்தியஅதிகாரியுமான டாக்டர் எம்.எ..மசூத் திருக்கோவில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஜெயவீர காஞ்சிரங்குடா இராணுவ முகாம் அதிகாரி கேப்ரன் ரவின்பெரேரா சமூர்த்தி சமுக பாதுகாப்பு உத்தியோத்தர் எஸ்.சீலன் மற்றும் சிரேஸ்ர கிராம சேவையாளர் கன.இராஜரொட்ணம் திருக்கோவில் பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோத்தர்கள் கிராமசேவை உத்தியோத்தர்கள் வியாபார நிலைகளின் உரிமையாளர் வர்த்தகர் சங்க தலைவர் கே.வினாயகமூர்த்தி ஆகியோர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .
மேலும் இப் பொதுக் கூட்டத்தில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அவை பின்வரும் மாறு.
1.சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத கடைகளை சீல் பண்ணுதல்.
மேலும் இப் பொதுக் கூட்டத்தில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அவை பின்வரும் மாறு.
1.சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத கடைகளை சீல் பண்ணுதல்.
2.அக்கரைபற்று ஆலையடிவேம்பு அட்டாளச்சேனை ஆகிய பிரதேசங்களில் இருந்து வருகை தரும் தனியார் மற்றும் அரச .
உத்தியோர்த்தர்கள் திருக்கோவில் பிரதேச எல்லைகளுக்கு பிசிஆர் செய்து கொவிட்19 தொற்று இல்லை என்ற சான்றிதழ் உடன் வரவேண்டும்.
03. தற்போதுநடைமுறையில் உள்ள கிராம மட்ட கொவிட்19 தடுப்பு செயலணியின் நடவடிக்கைகளை மேலும் வலுபடுத்தும் முகமாக கிராமஅபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் ஆலய நிருவாகத்தினர் விளையாட்டு கழக உறுப்பினர்கள் விவசாயப் பிரதிநிதிகள் ஏனைய கிராம மட்ட அமைப்புக்கலின் பிரதிநிதிகளயும் உள்ளடக்கி கிராமமட்ட விழிப்புணர்வு செயற்பாடுகளை அதிகரித்தல்.
05.நடமாடும் வியாபார செயற்பாடுகளை செயற்படுத்தல்
06.திருக்கோவில் பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபவோர்பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் தமது வியாரத்தை தொடர வேண்டும்.
07.மேற் கூறப்பட்ட செயற்பாடுகளை நடைமுறை படுத்தும் போது கொவிட்19
தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் தெளிவின்மையை தீர்க்குமுகமாக திருக்கோவில் கொவிட்19 குழுவினர் வெளியிட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் வருமாறு.
Ds -0778188498 ,Ads -0760997690, OIC- 0718591166,MOH office 0672265054
0 comments :
Post a Comment