மீஸானின் மகுடம் விருது- 2020" சாய்ந்தமருதை சேர்ந்த கவிஞர் நஸ்ருதீன் அலிக்கானுக்கு கிட்டியது.



சலீம் றமீஸ்-
லை,இலக்கிய, ஊடக,நாடக துறையில் பிரகாசிக்கும் கலைஞர்களை கௌரவிக்கும் மீஸானின் மகுடம் விருதுகளின் 2020 ஆம் ஆண்டுக்கான விருது சாய்ந்தமருதை சேர்ந்த கவிஞர் நஸ்ருதீன் அலிக்கானுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் கோவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக மிக எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுசேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய பிரதம இலிகிதரும் அமைப்பின் பிரதிப் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சி. நிஸார், அமைப்பின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆர்.ஏ.ஜௌஸான், மருதம் கலைக்கூடல் தலைவரும் அமைப்பின் கலை,இலக்கிய செயலாளருமான அஸ்வான் எஸ். மௌலானா உட்பட கலை,இலக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு கவிஞர் நஸ்ருதீன் அலிக்கானுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவித்தனர்.

கடந்த காலங்களில் தென்னிந்திய திரைப்பட நடிகர் பத்மஸ்ரீ டாக்டர் விவேக், நடிகர் விதார்த், இயக்குனர் பாரதிராஜா, போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இந்த விருதுகள் பல உள்நாட்டு கலைஞர்களுக்கும் கடந்த வருடங்களில் வழங்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :