அபு ஹின்ஸா-
கொரோனா தொற்றுடன் உச்சகட்ட ஆபத்தை எதிர்நோக்கிய அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் இசங்கணிச்சீமையும் முடக்கப்பட்டு இன்றுடன் 20 நாளைத் தொடுகிறது. இதனால் அன்றாட கூலிகளாக இருக்கும் இசங்கணிச்சீமை மக்களின் வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளது.அந்த அடிப்படையில் இன்று அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம் ஐய்யுப் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு பேசிய அவர். தனது கருத்தில் அக்கரைப்பற்று பிராந்தியம் தொடர்சியாக முடக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மக்களுக்கு உரிய அரச நிவாரணத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இரவு பகல் என்று பாராது இந்தப் பணிகளை முன்னெடுத்த அக்கறைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் றஷான், இசங்கணிச்சீமை கிராம சேவக உத்தியோகத்தர் ஏ.எஸ். ஏ ஹஸ்பி மற்றும் அக்கறைப்பற்று அனர்த்த முகாமைத்துவ பிரிவு, அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம், சமூக சேவை அமைப்புகள், தனவந்தர்கள், ஸகாத் நிதியம் உட்பட பல அமைப்புகளுடாகவும் பலவகையான நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம் ஏ றாசிகின் கண்காணிப்பின் கீழ் அனைத்து செயற்பாடுகளும் மிகவும் நீதமான முறையில் நடைபெற்றது. அதற்காக எமது தவிசாளர் அவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளில் தம்முடன் ஒருமித்து பயணித்த சமுர்த்தி உத்தியோகத்தர், வாழ்வாதார உத்தியோகத்தர், இசங்கணிச்சீமை ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், சிவில் அமைப்புக்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மட்டுமில்லாது சுகாதாரத்துறையில் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் நமது பிராந்திய நோயாளர்களை அடையாளப் படுத்துவதிலும் நமது பிராந்தியத்தை தனிமைப்படுத்தல் விதிமுறையில் இருந்து விடுவிக்கவும் அயராத முயற்சி செய்த அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நக்பர் பறூஷா, இலங்கை முப்படையினர், அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் அக்கரைப்பற்று இராணுவ கட்டளை தளபதி, இராணுவ அதிகாரிகள், பிராந்தியத்துக்கு பொறுப்பாக இருக்கும் பொது சுகாதார பரிசோதகர் பெளமி மற்றும் சகல சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் இசங்கணிச்சீமை மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன் -என்றார்.
0 comments :
Post a Comment