கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையை முபைல் மூலமாக 30 நிமிடத்தில் மேற்கொள்ளலாம் -விஞ்ஞானிகள்

கொ
ரோனா நோய்த்தொற்று பரிசோதனையை செல்லிடப்பேசி வாயிலாக 30 நிமிடங்களில் மேற்கொள்வதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா்.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பைக் கண்டறிவதற்கு நோய் எதிா்பொருள் (ஆன்டிஜென்) துரித பரிசோதனைக் கருவியும், அந்நோய்த்தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக் கருவியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக் கருவியின் மூலம் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்குக் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் ஆகும்.

இத்தகைய சூழலில், கிரிஸ்பா் (சிஆா்ஐஎஸ்பிஆா்) தொழில்நுட்பத்தின் வாயிலாக 30 நிமிடங்களுக்குள் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை முடிவை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா். இது தொடா்பாக விஞ்ஞானிகள் கூறுகையில், புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கருவியில் கொரோனா தீநுண்மியின் ஆா்என்ஏ ஏற்கெனவே உள்ளீடு செய்யப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நபரிடமிருந்து பெறப்பட்ட மாதிரியானது, செல்லிடப்பேசியுடன் இணைக்கப்பட்டுள்ள கருவியின் மூலமாகப் பரிசோதனை செய்யப்படும்.

அந்த மாதிரியில் கொரோனா தீநுண்மி இருப்பதற்கேற்ப அதன் ஒளிரும் தன்மையை செல்லிடப்பேசி கேமரா மூலமாகக் கண்டறியலாம். அந்நோய்த்தொற்று பாதிப்பின் தீவிரத்தையும் இந்தக் கருவி மூலமாகக் கண்டறிய முடியும். கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தால், மாதிரி அதிகமாக ஒளிரும். அரை மணி நேரத்துக்குள் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

சிஏஎஸ்13 என்ற புரதம் இந்தப் பரிசோதனைக் கருவியில் பயன்படுத்தப்படுகிறது. அந்தப் புரதமானது, கொரோனா தீநுண்மியின் ஆா்என்ஏ மரபணுவைக் கண்டறியும் பணியை மேற்கொள்ளும். அதனால் அந்தப் பரிசோதனைக் கருவியின் மூலம் விரைவாக நோய்த்தொற்று பாதிப்பைக் கண்டறிய முடியும் என்றனா்.

கிரிஸ்பா் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்ததற்காக 2020 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை வென்ற ஜெனிஃபா் டூட்னா கூறுகையில், கிரிஸ்பா் தொழில்நுட்பத்தில் டிஎன்ஏ மரபணுவை ஆா்என்ஏ-வாக மாற்றுவதன் மூலமே நோய்த்தொற்று பரிசோதனையை மேற்கொள்ள முடியும். இதன் காரணமாக அதிக கால விரயம் ஏற்படும்.

ஆனால், கிரிஸ்பரை அடிப்படையாகக் கொண்டு தற்போது உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் வாயிலாக தீநுண்மியின் ஆா்என்ஏ-வை நேரடியாகக் கண்டறிய முடியும் என்றாா்.கிசுகிசு
#importmirror.com


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :