பன்முகஆளுமைகொண்ட புண்ணியநேசன் 32வருடகால கல்விச்சேவையிலிருந்து ஓய்வு.

கா
ரைதீவைச்சேர்ந்த பன்முகஆளுமைகொண்ட ஆங்கில ஆசிரியர் கணபதிப்பிள்ளை புண்ணியநேசன் 32வருட கால கல்விச்சேவையிலிருந்து தனது 60ஆவது வயதில் ஓய்வுபெற்றுள்ளார்.

1960.12.12இல் பிறந்த திரு புண்ணிநேசன் காரைதீவிலுள்ள விக்னேஸ்வரா வித்தியாயத்தில் ஆரம்பக்கல்வியையும் விபுலாநந்தா மத்திய கல்லூரியில் இடைநிலை உயர்கல்வியையும் பெற்றார். 1988இல் ஆங்கில ஆசிரியராக முதல் நியமனம் பெற்று காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் கடமையேற்றார்.

காலி றிச்மன்ட் கல்லூரியில் சேவைமுன்பயிற்சியையும் பேராதனை ஆங்கில ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சியையும் பெற்று பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக மீண்டும் இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் பணியாற்றினார்.

பின்பு காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி அட்டப்பளம் விநாயகர் வித்தியாலயம் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் பணியாற்றி காரைதீவு கண்ணகி இந்து வித்தியாயத்தில் சிலகாலம் அதிபராகப்பணியாற்றினார்.இறுதியாக தான் பயின்ற விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஆசிரியராக உதவிஅதிபராகப் பணியாற்றி கடந்த 13ஆம் திகதி ஓய்வுபெற்றார். பணியாற்றியகாத்தில் மாணவரது மதிப்பையும் மக்களது நன்மதிப்பையும் பெற்ற அவர் எந்தக்கருமத்தையும் சீராக செம்மையாக நேர்த்தியாக செய்தார்.

 இதனால் ஆங்கிலதினப்போட்டிகள் தமிழ்மொழித்தினப்போட்டிகள் விளையாட்டுப்போட்டிகளுக்கு செயலாளராகவிருந்து கடமையாற்றியவர். ஆங்கில ஆசிரியராக கொடிகட்டிப்பறந்தபோதிலும் ரியுசன்வகுப்பை ஒருநாளும் நடாத்த விரும்பவில்லை.

மும்மொழியிலும் தேர்ச்சிபெற்ற இவர் பெரும்பாலான மேடைகளில் நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் கிரிக்கட்வர்ணணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

காரைதீவின் பழம்பெரும் நேரு சனசமுக நிலையத்தின் தலைவராக இருந்து சமுகசேவையாற்றியதோடு இன்று அதே நிலையத்தில் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.காரைதீவு விளையாட்டுக்கழகம் கிரிக்கட் கழகமாக ஆரம்பித்தவேளையில்முதல் செயலாளராகப் பணியாற்றிய இவர் கிரிக்கட் போட்டிகளில் ஆங்கில மற்றும் தமிழ் வர்ணணைசெய்வதில் புலமையாளராக விளங்கினார்.

சிவில்பாதுகாப்புக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய இவர் ஆங்கிலஆசிரியை த.நிர்மலாதேவியை கரம்பிடித்து சஜிந் டிலுசாந்த் யதுராங்கன் ஆகிய 3 ஆண்பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருக்கிறார்.கல்விச்சேவை பாடசாலை ரீதியாக ஓய்ந்தாலும் சமுகசேவை அவரை வரவேற்கிறது. நாமும் வாழ்த்துவோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :