கல்முனைப்பிராந்திய தொற்றுக்களின் எண்ணிக்கை 379 ஆகியது! கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் சுகுணன்.



காரைதீவு நிருபர் சகா-
ல்முனைப்பிராந்திய தொற்றுக்களின் எண்ணிக்கை 379ஆக உயர்ந்துள்ளது என பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் இதுவரை ஒரு நோயாளிக்கும் இரு வைத்தியர்கள் இரு தாதியஉத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஜவருக்கு கொரோனத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த சம்மாந்துறை தொற்றாளர் ஒருவரே மரணமானார் என்பதும் குறிப்பிடத்தககது.

கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 550ஜத் தாண்டியுள்ள அதேவேளை மாகாணத்துள் வருகின்ற கல்முனைப்பிராந்தியத்தில் தொற்றுக்கள் 379. எனவே ஏனைய 150தொற்றுக்களும் ஏனைய 3 பிராந்தியத்துள் வருகின்றது.

கல்முனைப்பிராந்தியத்துள் வருகின்ற அக்கரைப்பற்றுக் கொத்தணியில் 339பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதி 40பேரும்பிராந்தியத்தின் ஏனைய சுகாதாரப்பிரிவுகளில் இனங்காணப்பட்டுள்ளனர்.பிராந்தியத்தில் தனியொரு கிராமம் அதிகூடிய தொற்றுக்களைக்கொண்டது என்றால் அது 241தொற்றுக்களைக் கொண்ட அக்கரைப்பற்று எனலாம்.

அருகிலுள்ள அட்டாளைச்சேனையில் 49தொற்றுக்களாக உயர்ந்துள்ளது.சாயந்தமருதில் 17 பேர் ஆலையடிவேம்பில் 16 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்னும் பெறப்பட்ட பிசிஆர் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைக்கப்பெறவில்லை. அவை வந்தால் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்தியத்திலுள்ள பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 87பேரும் புதிதாக உருவாக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 92 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பிராந்தியத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் 72 பேரும் அட்டாளைச்சேனையில் 80 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நுரைச்சோலை நிலையம் தயாராகிவருகிறது.
இதுவரை கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை ஒரேயொரு கொரோனா இறப்பும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :