நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்துக்குள் மேலும் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

க.கிஷாந்தன்-

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்துக்குள் மேலும் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கினிகத்தேன பகுதியில் 18 பேருக்கும், பொகவந்தலாவயில் ஐவருக்கும் மற்றும் தலவாக்கலை, வட்டகொடை உட்பட ஏனைய சில பகுதிகளில் 9 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை பொதுசுகாதார அதிகாரிகள் முன்னெடுத்தனர். அத்துடன், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கினிகத்தேன பகுதியில் அம்பதலாவ, குறுந்துகொள்ள, யாஹிந்ந, பிட்டவல, கலுகல்ல, பொல்பிட்டிய, மற்றும் கீக்கியனகெதர ஆகிய பகுதிகளில் இருந்தே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மெலிபன் எனும் தொழிற்சாலையிலும் ஐவருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

பொகவந்தலாவ, தலவாக்கலை, கொட்டகலை, வட்டகொடை, மடக்கும்பரை ஆகிய பகுதிகளிலும் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை வரை 298 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சில தோட்டப்பகுதிகளில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :