சம்மாந்துறை சுகாதாரப்பிரிவுக்குட்பட்ட வீரமுனைக்கிராமத்தில் ஆலயமதகுரு ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கிழக்கில் கொரோனாத் தொற்றுக்குள்ளான முதல் இந்துமதகுரு இவராவார்.
சிறுநீரக நோயாளியான இவர் கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலைக்கு டயலிஸ்(இரத்தச்சுத்திகரிப்பு) செய்வதற்காக சென்றவேளை அங்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் 8ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றவேளை அங்கு சம்மாந்துறை நபரொருவர் கொரோனாவர் உயிரிழந்துள்ளார். அதே வார்ட்டிருந்த அவருக்கு அன்றைய சூழ்நிலைகாரணமாக செய்யப்படவில்லை.அதனர் மீண்டும் 10ஆம் திகதி சென்றவேளை அங்கு அவர் ஏலவே குறித்த வார்ட்டில் இருந்தவரென்ற காரணத்தினால் முதலில் பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்றுஇருப்பது உறுதிசெய்யப்பட்டது.
உடனடியாக அவரை கொழும்பு ஜடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். இவரது குடும்பமும் சூழலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
வீரமுனை ஆலயமொன்றின் மதகுருவான இவருக்கு வயது 65. கடந்த 4ஆம் திகதி இவ்வாலயத்தில் சங்காபிசேகம் இடம்பெற்றது.
ஆதலால் சங்காபிசேகத்திற்கு சென்ற பக்தர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து வீரமுனை ஆலயமுன்றலில் பரவலாக அன்ரிஜன் மற்றும் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
0 comments :
Post a Comment