கல்முனையில் முடக்கப்பட்ட பிரதானவீதி பொதுப்போக்குவரத்திற்காக திறப்பு!-4வது நாளாக முடக்கம்: இராணுவம் பொலிஸ் காவல்!



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனை மாநகரத்தின் சிலபகுதிகள் (31) வியாழக்கிழமை 4வது நாளாகவும் முடக்கப்பட்டிருந்தன.எனினும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பிரதானவீதி நேற்று மீண்டும் பொதுப்போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டது.

கடந்த இரு தினங்களாக பிரதானவீதியில் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.வாகனங்கள் வடக்கே ஆதாரவைத்தியசாலை அருகாகவும் தெற்கே செயிலான் வீதிக்கருகே நிறுத்தப்பட்டன. பிரதான வீதியில் சோதனையின்பின்னர் அத்தியாவசியசேவைக்கு மாத்திரம் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஏனையவாகனங்கள்வேறு மார்க்கத்தால் செல்ல அனுமதிக்கப்பட்டன.

ஆனால் (31) முதல் அனைவரும் பயணிக்கத்தக்கவாறு பிரதானவீதி மீண்டும் திறந்துவிடப்பட்டது..

எனினும் முடக்கப்பட்ட பிரதேசத்தினுள் யாரும் உட்செல்லவோ வெளியேறவோ முடியாதவாறு பாதுகாப்பு கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

வீதி திறக்கப்பட்டபோதிலும் நேற்று மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.பொதுச்சந்தை மூடப்பட்டுள்ளது.. பொதுப்போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

முடக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் பொலிசாரும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவலில் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை தெற்கில் தொற்றுக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுவருகிறது.
அதனையடுத்து சுகாதாரத்துறையும் பொலிசாரும் உசாராகச்செயற்பட்டதன் விளைவாக கடந்த 4தினங்களாக போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு முடக்கப்பட்டது.
பிரதான இடங்களில் இராணுவம் பொலிசார் காவல்காத்துவருகின்றனர்.

அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 236 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது. அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 763பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கடுத்ததாக கல்முனை மாநகரம் 236தொற்றுகக்ளுடன் உள்ளது.

கல்முனை தெற்கில் 185பேரும் சாய்ந்தமருதில் 36பேரும் கல்முனை வடக்கில் 15பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனைக்குடியை மையமாகக் கொண்ட கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக இவ்விதம் 185 ஆக உயர்ந்துள்ளமையால் அங்கு முடக்கச்செயற்பாடு 3வது நாளாக அமுலில்உள்ளது.

கல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான கல்முனை 11 கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பொலிசாரால் அறிவிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :