வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாணத்தில் நேற்றையதினம்(18) வெள்ளிக்கிழமை நண்பகல் வரை 50 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி தொற்றாளர்கள் விபரம் வருமாறு : கல்முனை தெற்கு - 33 பொத்துவில் - 8 சாய்ந்தமருது - 1 ஆலையடிவேம்பு -3 அக்கரைப்பற்று - 3 வாழைச்சேனை -1 திருகோணமலை-1
இதன்படி கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுகளின் எண்ணிக்கை 746 ஆக அதிகரித்துள்ளது .
அதேவேளை கல்முனைப்பிராந்தியத்தில் அதிகூடிய 583பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அந்தப்பிராந்தியத்தில் புதிதாக உருவான அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 541பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
கல்முனை தெற்கில் 75பேருக்கு தொற்று
அக்கரைப்பற்றை அடுத்து கல்முனையில் கொரோனாத்தொற்று திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக கல்முனை தெற்கில் மொத்தமாக 75பேர் இனங்காணப்பட்டுள்ளனர். சாய்ந்தமருதில் 19பேரும் ,கல்முனை வடக்கில் 9 பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனால் கல்முனை பல பகுதிகள் நேற்றுமுதல்(18) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெறிச்சோடிக்காணப்படுகின்றது.
இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 99பேரும், கல்முனை பிராந்தியத்தில் 583பேரும் ,திருமலை மாவட்டத்தில் 19பேரும் ,அம்பாறை பிராந்தியத்தில் 22பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
தனியாகப்பார்க்குமிடத்து அக்கரைப்பற்றில் மட்டும் 303பேரும், அடுத்ததாக வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திபிரிவில் அதிகூடிய தொற்றுக்கள் 61 இனங்காணப்பட்டிருந்தன.
அடுத்தபடியாக கல்முனை தெற்கில் 75 பேரும் ,
அட்டாளைச்சேனையில் 59பேரும் ,பொத்துவிலில் 38பேரும் ,ஆலையடிவேம்பில் 22பேரும் ,சாய்ந்தமருதில் 19பேரும் , இறக்காமத்தில் 17பேரும் ,திருக்கோவிலில் 13 பேரும், சம்மாந்துறையில் 12பேரும் ,ஏறாவூரில் 10பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.
சிகிச்சை நிலையங்களில் 1943 அனுமதி
கிழக்கிலுள்ள 06 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 542கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (18.12.2020) வரை 1943பேர் மேற்படி 6 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 1391பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.10பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.இன்னும் 24கட்டில்கள்; எஞ்சியுள்ளன.
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 657பேர் அனுமதிக்கப்பட்டு 499பேர் குணமடைந்து வெளியேறியதால் ,தற்போது 154பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.இன்னும் 34கட்டில் தேவையாகவுள்ளன.
மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 71 பேரும் ,கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 81 பேரும், பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 60பேரும் ,பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 78 பேரும், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 98 பேரும்சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
25112பேருக்கு பிசிஆர் பரிசோதனை
இதுவரை கிழக்கில் 25112பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள் அக்கரைப்பற்று கொத்தணிப்பகுதியில் மட்டும் 12208 பிசிஆர் அன்ரிஜன்ற் சோதனை நடாத்தப்பட்டது.
கல்முனைப்பிராந்தியத்தில் 13847 சோதனைகளும் ,மட்டக்களப்பில் 7086 சோதனைகளும், அம்பாறையில் 2390 சோதனைகளும் ,திருகோணமலையில் 1789சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment