கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் நிதியுதவியுடன்; யூ.ன் ஹெபிடாட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் கோவிட்19 தொற்றில் இருந்து தோட்ட மற்றும் கிராம மக்களை சுகாதார சமூக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பதற்கான அவசரகால செயற்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை,நுவரெலியா பிரதேச செயலப்பிரிவில் உள்ள சாந்திபுரம்,ரம்போட கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 வறிய மாணவர்களின் குடும்பங்களுக்கு வீட்டு பொருளாரத்தை மேம்படுத்தும் முகமாக அவர்கள் மேற்கொள்ளும் வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒரு மாணவருக்கு தலா 12,000.00 ரூபா பெறுமதியான பழமரகன்றுகள், வீட்டுத்தோட்ட உபகரணங்கள், சேதனப்பசளை, மரக்கறிவிதைகள், போசாக்கு உணவு பொதிகள் அன்பளிப்பு 2020.11.08ம் திகதி கிராம உத்தியோகத்தர் காரியலத்தில் நடைபெற்றது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான உதவியினை யூ.ன் ஹெபிடாட் நிறுவனத்தின்; பிரதி திட்ட முகாமையாளர் எஸ்.எல். அன்வர்கான் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திட்ட பொறியிலாளர் எம்.நிமலன் மற்றும் திட்ட மதிப்பீட்டு உத்தியோகத்தர் ஏ.வாசவன் திட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளரின் பிரதிநிதியாக கிராம உத்தியோகத்தர் அவர்களும் சமுர்த்தி உத்தியோகத்தாகள்;, பொருளதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியயோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment