கிழக்கில் கொரோனா தொற்றுக்கள் 577ஆகியது! கல்முனையில்419 : அக்கரைப்பற்று கொத்தணியில் 379.



காரைதீவு சகா-
கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச்செல்கிறது. கிழக்கில் இதுவரை(13.12.2020) 577 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதேவேளை கல்முனைப்பிராந்தியத்தில் அதிகூடிய 419பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அந்தப்பிராந்தியத்தில் புதிதாக உருவான அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 379பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.வழமைக்குமாறாக மக்கள் மத்தியில் ஒருவித பீதியும் அச்சமுமும் நிலவிவருகிறது. பாடசாலைகள் திறந்தபோதிலும் மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப தயங்குகின்றனர். அதனால் பெரும்பாலான பாடசாலைகள் மாணவரின்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றன.

கல்முனைப்பிராந்தியத்தில் புதிதாக அட்டாளைச்சேனையில் திடீர் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 51பேர் தொற்றிலுள்ளனர்.
இவர்களில் மினுவாங்கொட கொத்தணி மற்றும் ஏனைய இடங்கள்மூலமாக 23பேரும் பேலியகொட கொத்தணி மூலமாக 554 பேரும் தொற்றுக்கிலக்காகியிருந்தனர்.

இறுதியாக அக்கரைப்பற்றில் 33பேரும் அட்டாளைச்சேனை மற்றும் ஆலையடிவேம்பில் தலா இருவருமாக மொத்தம் 37பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 97பேரும் கல்முனை பிராந்தியத்தில் 419பேரும் திருமலை மாவட்டத்தில் 18பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 20பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
கிழக்கில் தற்போதைய நிலைவரப்படி கல்முனைப்பிராந்தியம் 419தொற்றுக்களுடன் முன்னிலைவகிக்கிறது.அதிலும் புதிதாக உருவான அக்கரைப்பற்று கொத்தணி 379 அதிகூடுதலான தொற்றுக்களை கொண்டிருக்கிறது. கிழக்கிலே அதிகூடிய தொற்றுள்ள தனியொருபிரதேசமாக அக்கரைப்பற்று மாறியுள்ளது.

அடுத்தாக வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திபிரிவில் அதிகூடிய தொற்றுக்கள் 60 இனங்காணப்பட்டிருந்தன.அடுத்தபடியாக அட்டாளைச்சேனையில் 51பேரும் ஆலையடிவேம்பில் 18பேரும் சாநய்தமருதில் 17பேரும் இறக்காமத்தில் 11பேரும் ஏறாவூரில் 10பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.

சிகிச்சை நிலையங்களில் 1729 அனுமதி
கிழக்கிலுள்ள ஆறு கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 516கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (12.12.2020) வரை 1729பேர் மேற்படி 6 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 1203பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.10பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.இன்னும் 50கட்டில்கள்; எஞ்சியுள்ளன.

காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 592பேர் அனுமதிக்கப்பட்டு 467பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 121பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.இன்னும் 1கட்டில் எஞ்சியுள்ளன.

மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 76 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 79 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 61பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 87 பேரும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 92 பேரும்சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

21103பேருக்கு பிசிஆர் பரிசோதனை
இதுவரை கிழக்கில் 20113பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள் அக்கரைப்பற்று கொத்தணிப்பகுதியில் மட்டும் 9008 பிசிஆர் அன்ரிஜன்ற் சோதனை நடாத்தப்பட்டது.
கல்முனைப்பிராந்தியத்தில் 10827 சோதனைகளும் மட்டக்களப்பில் 6619 சோதனைகளும் அம்பாறையில் 2113 சோதனைகளும் திருகோணமலையில் 1544சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று கொத்தணியில் 379.

புதிதாக உருவானஅக்கரைப்பற்றுக்கொத்தணியில் இதுவரை 379பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

அக்கரைப்பற்று பொதுச்சந்தையிலிருந்து இதுவரை அக்கரைப்பற்றில் 275பேரும் அட்டாளைச்சேனையில் 51பேரும் சாய்ந்தமருதில் 17பேரும் ஆலையடிவேம்பில் 18 திருக்கோவிலில் 9பேரும் இறக்காமம் 11பேரும் கல்முனை வடக்கில் 5பேரும் கல்முனை தெற்கில் 11பேரும் பொத்துவிலில் 8பேரும் சம்மாந்துறையில் 8பேரும் நாவிதன்வெளி காரைதீவு நிந்தவுரில் தலா 2பேருமாக மொத்தம் 379பேர் பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையின் மூலமாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :