புதிதாகப் பரவி வரும் கொரோனாவுக்கு 6 வாரங்களில் தடுப்பு மருந்தை உருவாக்குவோம் - பயோஎன்டெக் நம்பிக்கை!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

ற்போது புதிதாகப் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை 6 வாரங்களில் உருவாக்க முடியும் என்று பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே UKயில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக தற்போது கொரோனா வைரஸின் வேகம் UKயில்தான் அதிகமாகவுள்ளது.

இந்நிலையில், UKயில் தற்போது பரவுவது புதிய வகை கொரோனா வைரஸ் என்றும் இந்த புதிய வகை கொரோனா வைரஸை முன்னைய கொரோனா வைரஸை விட 70% வேகமாகப் பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்தப் புதிய வகை கொரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பு மருந்து வேலை செய்யுமா என்று கேள்வியும் நிலவுகிறது.


இதற்குப் பதிலளித்துள்ள பயோஎன்டெக் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் உகுர் சாஹின்:-





விஞ்ஞானபூர்வமாக பார்க்கும்போது தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸுக்கு எதிராகவும் நமது தடுப்பு மருந்து வேலை செய்யும்.

இருப்பினும், தேவைப்படும் பட்சத்தில் வெறும் 6 வாரத்தில் புதிய வகை கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தை உருவாக்க முடியும். UKயில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா 9 வித மாற்றங்களைக் கொண்டுள்ளது. வழக்கமாக இதுபோல புதிதாகக் கண்டறியப்படும் கொரோனா வைரஸ் வகைகளில் ஒரு மாற்றம் மட்டும் இருக்கும்.


பைசருடன் இணைந்து நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து பலனுள்ளதாகவே இருக்கும். ஏனென்றால், அதில் 1,000க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன, அவற்றில் 9 மட்டுமே புதிய வகையில் மாறியுள்ளன. அதாவது, 99% புரதம் இன்னும் அதே மாதிரியாக இருக்கிறது. இதனால் எங்கள் தடுப்பு மருந்து வழக்கம்போல பலனளிக்கும்" என்றார்.

ஜேர்மனியைச் சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனம் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பு மருந்தை அவசரக்கால பயன்பாட்டிற்குப் UK, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.




Attachments area

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :