700 பேர்வரை குடும்ப சகிதம் கலந்து கொள்ளும் பிரமாண்ட விருந்துபசாரம்- கொரோனா சட்டம் கோமாவில் ?

J.f.காமிலா பேகம்-

நாடாளுமன்றத்தில் பட்ஜட் விவாதத்தின் பின் சபாநாயகரின் இல்லத்தில் வழமையாக நடத்தப்படும் விருந்துசாரத்திற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.

வழமையாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த விருந்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படும்.
ஆனால் இம்முறை கொரோனா வைரஸின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் என 500ற்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சுமார் 700 பேருக்குவரை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விருந்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக திருமணம், பொதுநிகழ்வு என நடத்தினால் 50 பேர் அல்லது 100 பேர் வரை மாத்திரமே பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அரசாங்கத்தின் இந்த நிகழ்வில் அதிகளவானவர்கள் பங்கேற்பதால் அதன் பின் விமர்சனங்கள் எழக்கூடிய சாத்தியம் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இதுதவிர, இலங்கையில் மிகவும் பிரபலமான அலங்கரிப்பு நிறுவனமொன்றே சபாநாயகரின் இல்லத்தில் அலங்கரிப்புக்களை மேற்கொண்டு வருவதுடன் பிரமாண்ட செலவும் இதற்கான மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :