அமெரிக்காவில் இன்னும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல்- ஜோ பைடன்

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

கொரோனா வைரஸின் பிடியில், உலகின் பிற எந்த நாட்டையும் விட அமெரிக்கா மிக கடுமையாக சிக்கியுள்ளது. அங்கு நேற்று மதிய நேர நிலவரப்படி 1 கோடியே 74 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 3 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அங்கு பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ( Food and Drug Administration ) கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை சுகாதார சேவையில் வேலை செய்பவர்களுக்கும், முதியோருக்கும் செலுத்தும் பணி அங்கு விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மொடர்னா ( Moderna ) நிறுவனம் தயாரித்துள்ள mRNA-1273 என்ற தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ( Food and Drug Administration ) நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது. இது கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தடுப்பூசியின் 20 கோடி டோஸ்களை வாங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. அவற்றில் தற்போது சுமார் 60 லட்சம் டோஸ்கள் வினியோகத்துக்கு தயாராகவுள்ளது.
மொடர்னாவின் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மட்டுமின்றி 94.1% செயல்திறன் கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் இன்னும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ( Food and Drug Administration ) அனுமதியளித்திருப்பதற்கு அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜோ பைடன் கூறியதாவது:-

பைசர்-பயோஎன்டெக் மற்றும் தற்போது மொடர்னா என இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது ஒளிமயமான நாட்கள் முன்னதாகவே உள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இது மேலும் ஒரு மைல் கல்லாகும். இந்த தடுப்பூசியை வழங்க உதவியதற்காக விஞ்ஞானிகளுக்கும், வைத்திய நிபுணர்களுக்கும், சோதனைகளில் பங்கேற்றவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நான் திங்கட்கிழமையன்று ( நாளை ) பகிரங்கமாக கொரோனாவுக்கு தடுப்பூசியை செலுத்திக் கொள்ளப் போகிறேன். இவை அனைத்தையும் செய்வதற்கும், விரைவாக செயல்படுவதற்கும் நம்மிடம் ஆதாரங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறினார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :