கொரோனா நீங்குவதற்கு பொத்துவிலில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம்!

காரைதீவு நிருபர் சகா-

ர்டில் கொரோனா தொற்றிருநது மக்களையும்இ நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பொத்துவில் ஸ்ரீ ஆலயடிப்பிள்ளையார் ஆலயத்தில் பிரார்த்தனை வழிபாடு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் பொத்துவில் ஆலயடிப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ கோபிநாதசர்மா குருக்கள் தலைமையில் மற்றும் சிவ ஸ்ரீ யோகேஸ்வரன் குருக்கள். சிவ ஸ்ரீ காண்டிபன் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடனா அதிகாலை 05.30 மணிக்கு இடம்பெற்றது




இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் ஆலய தலைவர் எஸ். கந்தசாமி. ஆலயநிர்வாகத்தினர் அதிகாரிகள்இகலாச்சார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன்
இப்பிராத்தனை நிகழ்வானது 6.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் 'ஆலயதரிசனம்' நிகழ்வில் ஒலிபரப்பு செய்யப்பட்டது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :