கிழக்கு மாகாணத்தில் கொறோணாத் தொற்றினால் இறப்பு நிகழ்ந்ததாக சொல்லப்படுகின்ற சம்மாந்துறையைச் சேர்ந்த வயது முதிர்ந்த சகோதரரின் ஜனாஸாவை ஒரு ஆய்வுக்கான மாதிரியாகக் கொண்டு (Sample) அடக்கம் செய்ய அனுமதி வழங்குங்கள்.
இந்த அடக்கத்தினால் நிலக் கீழ் நீரூற்று மாசடைகின்றதா? அல்லது மாசடையவில்லையா? என்பதனை அவ்வடக்கம் செய்யப்பட்ட பிரதேசத்திலுள்ள மக்கள் மத்தியில் கொறோணா பரவும் நிலைமை அல்லது அதன் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீரைப் பரிசோதனை செய்வதன் மூலம் (ஆய்வில் வெளிப்படைத்தன்மை அவசியம்) ஒரு நிலையான முடிவிற்கு வரமுடியும்தானே.
இதற்கு தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம், சமூகவியல் பிரிவு, புவியியல் பிரிவு மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றிலுள்ள துறைசார் கல்வியிலாளர்கள் இணைந்து இவ்வாய்வை மேற்கொள்ள முடியும்.
அல்லது வெளிநாடுகளில் கொறோணா ஜனாஸாக்களை அடக்கம் செய்கின்ற நாடுகளின் இதுவரையான அனுபவத்தை கேட்டறிந்து ஒரு நிலையான முடிவிற்கு வரமுடியும்.
இவ்வாறான ஒரு அறிவார்ந்த முயற்சிக்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
0 comments :
Post a Comment