கிழக்கில் கொரோனாத்தொற்றுக்குள்ளான முதல் மாணவி! கிழக்கில் முதல் மரணம்: மக்கள் பீதியில்.



வி.ரி. சகாதேவராஜா-
கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக மாணவியொருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்படிருக்கிறது.
கல்முனை உவெஸ்லி உயர்தரக்கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் நற்பிட்டிமுனையைச்சேர்ந்த மாணவியொருவரே இவ்விதம் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
அண்மையில் அக்கரைப்பற்றில் பணியாற்றும் நற்பிட்டிமுனையைச்சேர்ந்த ஒரு அரசஉத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் தெரிந்ததே. அவரது மகள்தான் தற்போது தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்று சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் செ.புவனேந்திரன் உவெஸ்லி அதிபர் செ.கலையரசன் ஆகியோர் மாணவியின் தொற்றை உறுதிப்படுத்தினர். சுகாதாரத்துறையினரின் ஆலோசனையைப்பெற்று பாடசாலை நடாத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக கூறினார்கள்.

இதேவேளை ஆயிரம் மாணவர் படிக்கும் உவெஸ்லி பாடசாலைக்கு நேற்று ஆக 36 மாணவர்களே வருகைதந்ததாக அதிபர் தெரிவிக்கிறார்.அதுவும் தரம் 11 பரீட்சைக்கு 138மாணவர்களுக்கு ஆக 36மாணவர்கள் வருகைதந்துள்ளனர். இதேவேளை அருகிலுள்ள பற்றிமா தேசிய கல்லூரிக்கு கடந்த சில தினங்களாக எந்த மாணவரும் பாடசாலைக்கு வரவில்லையெனத் தெரியவருகிறது. . இவ்விதம் பல பாடசாகைள் வெறிச்சோடிக்காணப்படுகின்றன.

கிழக்கின் முதல் கொரோனா மரணம்.

இதேவேளை கிழக்கில் முதலாவது கொரோனா மரணம் நேற்று சம்பவித்துள்ளது.
சம்மாந்துறையைச் சேர்ந்த அவர் கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்தநிலையில் கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து அவரை கொழும்பு ஜடிஎச் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்கையில் அவர் மரணமடைந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :