இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

லங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானிகளுக்கு பயிற்சி வழங்கும் PT6 ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் குறித்த விமானம் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விமானி மாத்திரமே விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை - சீனக்குடாவில் இருந்து குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணைப்பு:
விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு
கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருந்தது.

விமானிகளுக்கு பயிற்சி வழங்கும் PT6 ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் குறித்த விமானம் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விமானி மாத்திரமே விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை - சீனக்குடாவில் இருந்து குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :