தமிழ் எம்பிக்களின் வீரியமும், ஜனாசாக்கள் எரிக்கப்பட்டும் வீதிக்கு இறங்க தைரியம் இல்லாத முஸ்லிம் எம்பிக்களும்.



முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-   

மிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமனறத்தில் உரையாற்றுவதுடன் தங்களது கடமைகள் முடிவடைந்துள்ளது என்று தமிழ் மக்களை ஏமாற்றவில்லை.

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் காரசாரமாக உணர்வுகளுடன் உரையாற்றிவிட்டு, அவைகள் தீர்க்கப்படாவிட்டால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு அவ்வப்போது களத்தில் நின்று போராடி வருகின்றார்கள்.

ஆனால் எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமனறத்தில் சம்பிரதாயத்திற்காக உரையாற்றிவிட்டு அதன் காணொளிகளை தங்களது அல்லக்கைகளுக்கு வளங்கிவிடுகின்றார்கள்.

அல்லக்கைகள் அதனை ஆராத்தி எடுத்துக்கொண்டு ஊரெல்லாம் புகழ்பாடுகின்றார்கள். அத்துடன் தங்களது கடமைகள் முடிவடைந்துவிட்டது என்ற திருப்தியில் முஸ்லிம் எம்பிக்கள் கொழும்பிலே காலத்தை கடத்துகின்றார்கள்.

மக்கள் பணிகளுக்காகவே தங்களது எம்பிக்கள் கொழும்பில் இருப்பதாக ஊரில் இருக்கின்ற அல்லக்கைகள் நம்புகின்றார்கள். ஆனால் எம்பிக்களோ, ஊருக்கு போனால் மக்களின் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும் அதனால் கொழும்பில் வசிப்பதுதான் நின்மதி என்று நினைக்கின்றார்கள்.

தமிழ் எம்பிக்களோ பாராளுமன்ற நாட்களில் மக்களின் பிரச்சனைகளை எடுத்து உரைப்பதற்காக மடுமே கொழும்பில் இருப்பதுடன், ஏனையே நாட்களில் மக்களோடு மக்களாக அரசுக்கு எதிரான கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

எனவே பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை தமிழ் மக்கள் முழுமையாக அனுபவிக்கின்றார்கள் ஆனால் முஸ்லிம் மக்கள் ஏமாறுகின்றார்கள். இதுதான் இன்றைய பாராளுமன்ற அரசியலாகும்.

சிறிய பிரச்சினைகள் என்றுகூட பார்க்காமல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அழைத்துக்கொண்டு வீதியில் இறங்கி போராடி வருவதனை நாங்கள் அன்றாடம் காண்கின்றோம்,

ஆனால் முஸ்லிம் ஜனாஸாக்கள் தொடர்ந்து எரிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், வீதிக்கு வந்து அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்திய எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் எங்களால் காணக்கிடைக்கவில்லை. அனைவரும் முஸ்லிம் மக்களுக்கு கதை சொல்லி ஏமாற்றுகின்ற அரசியலையே செய்து வருகின்றார்கள். அதற்காக அவர்களது அல்லக்கைகள் ஒத்து ஊதுகின்றார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :