சாய்ந்தமருது பொலிவேரியனில் "கவன் சீலை போராட்டம்" முன்னெடுப்பு !



நூருல் ஹுதா உமர்-
கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

அதில் ஒரு அங்கமாக நாடு முழுவதிலும் "கபன் சீலை போராட்டம்" எனும் மௌனவழி போராட்டம் இனம், மதம், பிரதேசம் கடந்து இலங்கையர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனை ஆதரித்ததாக சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தை சேர்ந்த பாத்திமா பெண்கள் அமைப்பினால் இன்று (15) மாலை சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம ஹிஜ்ரா பள்ளிவாசல் வேலி மற்றும் வெலிவேரியன் கிராம நுழைவாயில் பாலத்தில் வெள்ளை துணிகளை கட்டி முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் "கபன் சீலை போராட்டம்" எனும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாத்திமா பெண்கள் அமைப்பின் தலைவி ஷப்னா அமீன் அன்ஸார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள், ஆலோசகர்கள், பெலிவேரியன் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டு "கபன் சீலை போராட்ட கோரிக்கையில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நாடு முழுவதிலும் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :