நான் தீக்குளிக்க போகிறேன் என் மரணத்துக்கு பொலிஸ் மா அதிபரே பொறுப்பு என்கிறார்- சுமனதேரர்

 ட்டக்களப்பில் வாழ்வதையிட்டு வெட்கமடைகிறேன், நகரின் பிரதான வீதிலில் வெகு விரைவில் தீக்குளிப்பேன் என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வைத்து இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் காணொளியொன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மங்களகம பொலிஸ் நிலையத்திலேயே அதிகளவான வழக்குகள் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திசாநாயக்க என்ற அதிகாரியே கூடுதலான வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

ஒரு சம்பவத்திற்கு நான்கு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். ஒரு விடயத்தை நான்காக பிரித்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் புராதன தொல்பொருள் சின்னங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் தான் தொடர்ந்து போராடி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தனக்கு எதிராக தான் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளதாகவும், பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் விரைவில் தினம் ஒன்றை நியமித்து, அன்றைய தினத்தில் மட்டக்களப்பு நகர மத்தியில் இறங்கி தனது உயிரை மாய்த்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தனது மரணத்துக்கு பொலிஸ் மா அதிபரே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.சிலோன்நேசன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :