MIMஇர்ஷாத்-
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மீது சேறுபூசும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் அண்மையில் நடந்தது.
இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.
குறிப்பாக சஜித் பிரேமதாஸ மீதான சேறுபூசல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்திருப்பதால் இந்த முடிவை அக்கட்சி எடுத்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
வழக்கு சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு கட்சியின் சட்டப்பிரிவினை நாடவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment