கண்டி மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் தேவைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் வரவு – செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் ஹக்கீம்



ண்டி மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவிவரும் ஆளணிப் பற்றாக்குறைகள், பௌதிக வளத் தேவைகள் போன்றவை நிவர்த்திக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பிரஸ்தாப மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
வரவு – செலவுத் திட்ட, கல்வி அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவற்றைச் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

கண்டி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் குறிப்பாக தமிழ் மொழி மூல தேசிய பாடசாலைகள் பலவற்றிலும் குறிப்பாக ஆளணிப் பற்றாக்குறைகள், பௌதிக வளம் மற்றும் கட்டடத் தேவைகள் என்பன உட்பட ஏராளமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
மடவளை மதீனா தேசிய பாடசாலை, கம்பளை ஸாஹிரா தேசிய பாடசாலை உட்பட பல பாடசாலைகள் இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக எதுவித புதிய கட்டட நிர்மாண வசதிகளும் செய்து கொடுக்கப்;படாத நிலையில் அந்த தேசியப் பாடசாலைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, கம்பளை சாஹிரா தேசியப் பாடசாலையில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவின் விளைவாக பாவனைக்கு உதவாத கட்டடங்கள் அகற்றப்பட வேண்டிய நிர்பந்தம் காணப்படுகின்றது. அவற்றிற்கு புறம்பாக புதிய கட்டடங்கள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட வேண்டும். ஆண்டியாகடவத்தை முஸ்லிம் பாடசாலையும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டு கட்டடமொன்று இல்லாது போன நிலையில் தற்காலிகமான கட்டடமொன்றை பாடசாலை நலன் விரும்பிகள் சேர்ந்து அமைத்துக் கொடுத்திருக்கின்ற நிலவரம் நிலவுகின்றது.
இவ்வாறே, கல்ஹின்ன தேசிய பாடசாலை, அக்குரணை சாஹிரா பாடசாலை, அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரி போன்ற பல பாடசாலைகளில் சில தசாப்தங்களாகவே புதிய கட்டடங்கள் எவையும் நிர்மாணித்துக் கொடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. அத்துடன் இப்பாடசாலைகளில் சில பாட விதானங்களுக்குரிய ஆசிரிய குறைப்பாடுகளும் இருக்கின்றன என்பதை கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :