கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.
அதில் ஒரு அங்கமாக தாருஸபா அமையம் மற்றும் அல்- மீஸான் பௌண்டஷன் - ஸ்ரீலங்கா அமைப்பினர் உட்பட கல்முனை பொது அமைப்புக்கள் பல இணைந்து கல்முனை முஹையத்தின் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னாள் வெள்ளை துணிகளை கட்டி முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் "கவன் சீலை போராட்டம்" எனும் போராட்டம் ஒன்றை இன்று மாலை முன்னெடுத்தனர்.
அல்- மீஸான் பௌண்டஷன் - ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளர், பிராந்திய இணைப்பாளர்கள்,.தாருஸபா அமைய முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்த அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா உட்பட பொதுமக்கள் பலரும் இனம், பிரதேசம் கடந்து இந்த போராட்டத்தை நாடு முழுவதிலும் ஆங்காங்கே முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment