வெளியார் வாகனம் நிறுத்துவதால் அட்டன் பஸ் தரிப்பிட்டத்தில் அசௌகரியம்



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
ட்டன் பொதுபோக்குவரத்து பஸ்தரிப்பிடத்தில் வெளியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதனால் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாவதாக தனியார் பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் தெரிவிக்கின்றனர்

மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபைக்குற்பட்ட அட்டன் பொது பஸ் தரிபிடத்திலே நீண்ட காலமாக இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்
பஸ் தரிப்பித்தை அண்மித்த வர்த்தக நிலைய உரிமையாளர்களின் வாகனங்கள் மற்றும் , முச்சக்கர வண்டிகளை நிறுத்தி விட்டு செல்வதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தமது சேவையை செய்ய முடியாதுள்ளது.
மேலும் , பஸ் தரிப்பிட்டத்தில் வெளியாரின் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் போது அதை ஒதுக்குமாறு நடத்துனர் அல்ல சாரதிகள் கூறும் பட்சத்தில் முறுகல் நிலை ஏற்படுகிறது 30/12/2020 இன்றும் இவ்வாறானதொறு சம்பவம் இடைப்பெற்றுள்ளது

குறித்த வாகனங்களை அகற்றுமாறு தனியார் பஸ் நிலைய நேர கண்காணிப்பாளர்களுக்கு அறிவித்த போது இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என சாரதிகளும் நடத்துனர்களும் குற்றம் சாட்டுகின்றனர்
தொடர்ச்சியாக விக்டன் ,டெம்பஸ்டோ,ஹைய்ட்ரி, வட்டவளை, அந்தோணிமலை, பகுதியில் சேவையில் ஈடுபடுபவர்களே இவ்வாறு தொடர்ச்சியாக அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அட்டன் தனியார் பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


மேலும் பஸ் தனியார் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால் தொடர்பு கொள்ள முடியவில்லை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :