மக்களின் வரிப்பணத்தில் செயற்படும் நாம் மக்களுக்கு சேவை செய்வதே எமது நோக்கமாகும் -காரைதீவு பிரதேச சபைதவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில்



க்களின் வரிப்பணத்தில் செயற்படும் நாம் மக்களுக்கு சேவை செய்வதே எமது நோக்கமாகும் என காரைதீவு பிரதேச சபைதவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபை யின் 34 அமர்வு பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில் தலைமையில் புதன்கிழமை (16) இடம்பெற்றது

கொரோனா தொற்று காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சபை நடவடிக்கை இடம்பெற்றதுடன் ஆரம்பமாக சபை நடவடிக்கைகான கூட்டறிக்கை வாசிக்கப்பட்டதுடன் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

இங்கு உரையாற்றிய தவிசாளர் மக்களின் வரிப்பணத்தில் செயற்படும் நாம் மக்களுக்கு சேவை செய்வதே எமது நோக்கமாகும் .

மேலும் உரையாற்றுகையில் சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி அவர்களிடம் சபை அமர்வின் போது வேண்டுகோள் ஒன்றை விடுத்தார் நாட்டில் ஆரம்பத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களிடம் கொரோனா தொற்று உள்ளான போது நாட்டை எவ்வாறு முடக்கினீர்களோ அதே போன்று எமது மாவட்டத்தையும் முழுமையாக முடக்க வேண்டும் ஏனெனில்

இன்று அம்பாறை மாவடட்த்தில் 500 க்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் மாவட்டத்தை பகுதி பகுதியாக முடக்குவதை விட முழுமையாக மாவட்டத்தை முடக்கி இவ் மாவட்டத்தில் உள்ள மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :