உதகை மலை ரயிலை காவியாக மாற்றி தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு கோவை எம்.பி நடராஜன் கண்டனம்



செய்யது இப்ராஹிம் கனி-
தகை மலை ரயிலை காவியாக மாற்றி தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோவை எம்.பி நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
மலையை குடைந்து நூற்றுக்கணக்கான உழைப்பாளர்களின் உழைப்பில் உதகை ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான சுற்றுலா மலை பாதை என்பதால் இதற்கு யுனஸ்கோவின் விருதை பெற்றுள்ளது.
கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மொத்தமாக ரயில்வே நிர்வாகத்திற்கு கட்டணத்தை செலுத்தி சிறப்பு மலை ரயிலை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறார்.
நபர் ஒருவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிறப்பு ரயிலின் முன் பகுதியில் தெற்கு ரயில்வே இலட்சினைகள் எதுவும் இல்லாமல் TN 43 என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. ரயிலின் முன்புற பகுதியும் காவி வண்ணத்தில் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் வழக்கமாக இயக்கப்படும் மலை ரயில் சேவை துவங்காத நிலையில், சிறப்பு கட்டண ரயில் சேவைக்கு மட்டும் ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து இருக்கிறது.
கட்டண ரயிலை மொத்தமாக தனியாருக்கு வாடகைக்கு விடுவதன் மூலம், சிறப்பு கட்டண ரயில் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தை சிதைப்பதுடன், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் உதகை ரயில் பாதை தாரைவார்க்கப்பட்டு உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உடனடியாக ரயில்வே துறை உதகை சிறப்பு மலை ரயிலை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :