இறால் வளர்ப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் தலைமையில் இன்று(15) நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் இறால் வளர்ப்பிற்கு சாத்தியமான பிரதேசங்கள் காணப்படுவதாகவும் அப்பிரதேசங்களை சரியாக இனங்கண்டு உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய செயற்படுத்துவதன் மூலம் மாவட்ட மக்கள் பயன் பெறுவதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மாவட்டத்தில் இறால் வளர்ப்பிற்குறிய பிரதேசங்கள், இனங்காணப்பட்ட பிரச்சினைகள், தடைகள் என்பன இதன்போது நக்டா நிறுவனத்தினால் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களை இணைத்து குறித்த பிரச்சினைகள் மற்றும் தடைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எம்.ஏ.அனஸ்,திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment