சாணக்கியன் எம்.பியின் பேச்சை வடிகட்டி இராஜதந்திரமாக கையாள முஸ்லிம் சமூகம் பக்குவப்பட வேண்டும்

அபு ஹின்ஸா-

சாணக்கியன் யாருடைய ஆள் ? அவருடைய வரலாறு என்ன ? எதிர்கால திட்டம் என்ன? என்பதெல்லாம் எமது முஸ்லிம் சமூகத்துக்கு தேவையற்ற விடயம். இந்த சந்தர்ப்பத்தில் ஜனாஸா நல்லடக்கத்துக்காக வரும் ஆதரவு குரலை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே ஒழிய அநாதையாக விட கூடாது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ .எம்.ஷிபான் தெரிவித்தார்.

அண்மையில் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தனது கருத்தில்

சாணக்கியனின் பேச்சை புகழ்வதையோ வசைபாடுவதையோ நிறுத்திவிட்டு அதிலிருந்து வடி கட்டி எடுக்க வேண்டிய விடயத்தை மட்டும் மேலெழ செய்ய வேண்டும். எமது போராட்டம் சர்வதேச அளவில் வலிமை பெற்றதாக இருக்க வேண்டும் என நாம் விரும்பினாலும், அதற்கான கவனயீர்ப்பை எடுப்பதில் தடுமாறிக்கொண்டிருக்கும் சமூகமாக நாம் உள்ளோம்.

“muslims are forcefully cremated in srilanka” என்பது எடுபடாத நேரத்தில் சர்வதேச ரீதியில் எமது போராட்டத்துக்கு ஆதரவாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூடிய விடயமொன்றை சாணக்கியன் வடி கட்டி எடுக்கும்படி கூறியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு மரணித்த தமது உறவுகளை நினைக்கவும் முடியாது. முஸ்லிம்களுக்கு மரணித்த தமது உறவுகளை புதைக்கவும் முடியாது. 

கிறித்தவர்களுக்கு மரணித்த தமது உறவுகளுக்காக நீதியும் கிடையாது.

இவை அனைத்தும் ஒரே நாடு ஒரே சட்டம் என வேதாந்தம் ஓதிக்கொண்டு ஆட்சி நடத்தும் இலங்கையிலேயே நடக்கின்றது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் பேச்சை வடிகட்டி எடுத்து இராஜதந்திரமாக கையாள முஸ்லீம் சமூகம் பக்குவப்பட வேண்டும்.மாத்திரமல்லாமல் மீண்டும் மீண்டும் மல்லாந்து படுத்து கொண்டு மேலே பார்த்து துப்பிக்கொண்டே இருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :