*அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை எமது சமூகத்திற்கு ஆற்றிய பணிகள்


லங்கையில் இஸ்லாமிய சமூகத்தை கட்டுக்கோப்புடன் வழிகாட்டுவதில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நூற்றாண்டை அண்மித்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ். (1924 - 2020)

அன்று தொடக்கம் இன்றுவரை இஸ்லாமிய சமூகத்தினர் ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலிலேயே தங்களுடைய மார்க்க விடயங்களை முன்னெடுக்கின்றனர். ஆரம்பத்தில் ஒரு சில விடயங்களில் மாத்திரமே ஜம்இய்யதுல் உலமா கவனம் செலுத்தியது. ஆனால் தற்போது பத்வாக் குழு, பிறைக்குழு, கல்விக்குழு, சமூக சேவைக் குழு, ஒருங்கிணைப்புக்கும் ஒத்துழைப்புக்குமான குழு, ஹலால் பிரிவு, மக்தப் பிரிவு, இளைஞர் விவகாரப் பிரிவு, மகளிர் விவகாரப் பிரிவு, உலமாக்கள் விவகாரம், ஆய்வுக்கும் வெளியீட்டுக்குமான குழு என 15 உபகுழுக்களுடன் சிறப்பாக இயங்கி வருகின்றது.

சமூகத்தை ஜம்இய்யதுல் உலமா சபையின் கீழ் ஒற்றுமைப்படுத்தி ஒரே கோட்டில் பயணிக்க செய்ய வேண்டும் என முயற்சித்த எத்தனையோ உலமாக்கள் மரணித்து விட்டார்கள்.

"அல்லாஹ் அவர்களுடைய மண்ணறைகளை பிரகாசமாக்கி வைக்க வேண்டும்" . கடந்த 20 ஆண்டுகளாக ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் அதிகமான உலமாக்கள் ஒற்றுமையோடு செயற்படுகிறார்கள். கிட்டத்தட்ட இலங்கையில் உள்ள 8000 உலமாக்கள் அங்கம் வகிக்கின்றனர். 2000ம் ஆண்டு பாராளுமன்ற கூட்டிணைப்பு சட்டத்தின் கீழ் ஜம்இய்யதுல் உலமா பதிவு செய்யப்பட்டது

கடந்த காலங்களில் எமது சமூகத்திற்கு மத்தியிலே காணப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுக்கள், சண்டை, சச்சரவுகள் குறைவடைந்துள்ளது. 

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரே மேசையில் அமர்ந்து பேசி தீர்வைக் காணும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழிகாட்டியுள்ளது. இலங்கையில் 24 மாவட்டங்களிலும் உள்ள 150 கிளைகளையும் சிறப்பாக வழிநடாத்துகின்றது.


சமூகத்திற்கு தேவையான காத்திரமான பங்களிப்பை ஜம்இய்யதுல் உலமா வழங்கியிருக்கின்றது.

குறிப்பாக...

01. சமூக ஒற்றுமை
*ஒற்றுமைப் பிரகடனம்
02. அணர்த்த நிவாரண சேவை
03. ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் மக்தப் மத்ரஸா
04. ஹலால் சான்றிதழ்
05. மத்ரஸாக்கள் ஒன்றியம்
06. பிறைக்குழு
07. தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மார்க்கத் தீர்ப்பு வழங்கல்
08. சமூகப் பிரச்சினைகளில் முன்னின்று செயற்படல்.
09. இளைஞர் வழிகாட்டல்.
10. போதை ஒழிப்பு.
11. கல்வி மேம்பாடு.
12. சமூக சேவைகள்.
13. ஆய்வுகளும் வெளியீடுகளும்

*Declaration of Unity - ஒற்றுமைப் பிரகடனம்*
*Declaration of Co-existence - சகவாழ்வுப் பிரகடனம்*
*மனாகிபுஸ் ஸஹாபா*
*சிங்கள மொழியில் அல்குர்ஆன்*

14. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்
15. உலமாக்களை வளப்படுத்தல்.
*மூத்த உலமாக்களை கௌரவித்தமை*

என பல விடயங்களைக் கூறலாம்.
இவ்வாறான நல்ல பல விடயங்களை ஒருக்காலும் எமது சமூகம் மறந்து விட முடியாது.

*தற்போதைய தலைவர் மதிப்புக்குரிய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி அவர்கள் இந்த ஜம்இய்யதுல் உலமாவின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். ஜம்இய்யா தலைவராவதற்கு முன்னரே 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று மார்க்க உபதேசங்கள் செய்துள்ளார். இது வரைக்கும் 25000க்கும் மேற்பட்ட மார்க்க உரைகளை நிகழ்த்தியுள்ளார். உலகத்தில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர் (Most influential Muslims in the world) சிறந்த மொழியாற்றலுடையவர்.*


ISIS என்பது பயங்கரவாதக்குழு அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை றிஸ்வி முப்தி தான் முதன்முதலாக பகிரங்கமாக அறிவித்தார். 2015ம் ஆண்டே ஜம்இய்யதுல் உலமா ஏனைய அமைப்புக்களோடு சேர்ந்து ISIS பயங்கரவாத அமைப்பு என்பதை பிரகடனம் செய்தது.

கடந்த முறை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவின் போது தன்னை தெரிவு செய்யாமல் வேறு ஒருவரை தெரிவு செய்யுமாறு வலியுறுத்தினார். ஆனால் ஏனையவர்கள் வற்புறுத்தலாக அவரையே தெரிவு செய்தனர். எந்த நேரம் வாயைத் திறந்தாலும் ஒற்றுமை, ஒற்றுமை சமூகம் என்றே பேசுவார்.

ஆனால் இன்று எமது சமூகத்தில் உள்ளவர்களே ஜம்இய்யதுல் உலமாவையும் அதன் தலைவரையும் களங்கப்படுத்துகின்றனர். சில விடயங்களைப்பற்றிய தெளிவின்மையால், தெளிவு பெறாமையால் பகிரங்கமாக அசிங்கப்படுத்துகின்றனர்.
சிலர் பதவி ஆசையில் எக்காளமிடுகின்றனர். இன்று இஸ்லாமிய பெயர் தாங்கி பத்திரிகையே கேலிச்சித்திரம் வெளியிடும் அளவுக்கு கேவலப்பட்டு போனதை நினைக்கும் போது மன வேதனையாக இருக்கிறது.

இது எமது சமூகத்திற்கு ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான அபாய சமிக்ஞை.
இந்த நிலை தொடர்ந்தால் இஸ்லாமிய சமூகத்தின் கட்டுக்கோப்பு சீர்குலைந்து விடும். அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :