கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை கொங்கரீட் இடப்பட்ட குழியில் புதைப்பதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
ஜனாஸாக்களை எரிக்கின்ற அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக பாரிய எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இதற்கு மாற்று யோசனையாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத்தினால் இந்த யோசனை முன்வைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் நாட்களில் நடைபெறுகின்ற கொரோனா ஒழிப்பு தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment