ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா இன்று (03) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஐக்கியத்திற்காக சஜித் பிரேமதாசவுடன் கைகோர்க்கப்போவதாக தெரிவித்துள்ளார் என்று எதிர் கட்சித் தலைவர் சஜீத் பிரமதாஸவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலி ஸாஹீர் மெளலானா 1988 ஆண்டு முதல் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் ஒரு அரசியல்வாதி. இவர் கடந்த 2015யில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் மரச்சின்னத்தில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக இருந்தவர்.
1994 ஆகஸ்ட் 16 முதல் 2004 ஜூன் 23 ஆம் திகதி வரை ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், விடுதலைப் புலிகளினால் தனது உயிருக்கு ஆபத்து என்ற காரணத்தால் பாராளுமன்றத்தில் இருந்து விலகினார், பின்னர் அமெரிக்காவின் இலங்கை தூதரகத்தில் மூத்த இராஜதந்திரியாக கடைமையாற்றினார்.
மேலும் 2010 ல் இலங்கைக்கு திரும்பிய அவர் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு எராவூர் நகரபிதாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கிழக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் 2015 இல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(குறித்த தகவல் எதிர் கட்சித் தலவர் சஜீத் பிரமதாச அவர்களின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கம் பதியப்பட்டுள்ளவை என்பது சுட்டிக்காட்டலாகும்)
0 comments :
Post a Comment