இன்றைய ஊடகவியலாளர்களும் எம் சமூகமும்....!!



முகம்மட் காமில்-

டகத்துறை என்பது சுதந்திர மானதும் தார்மீக பொறுப்பு வாய்ந்ததுமகும். ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் அங்கம் வகிப்பவர்கள் கண்டிப்பாக ஊடகத்துறையில்
Diploma in journalism
Higher Diploma in Journalism
Degree in Journalism
Master in Journalism
M.Phil in Journalism
PhD in journalism

பட்டங்கள் பெற்றிருக்க வேண்டியதும் அதேவேளை போதியளவு துறைசார் அனுபவமும் மொழித் தேர்ச்சி பெற்றிருத்தலும் அவசியமும் காலத்தின் தேவையாகும். 
அதேவேளை இவர்கள் முறையாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களாகவும் இருத்தல் வேண்டும்.

இது இவ்வாறு இருக்க இன்றைய சூழ்நிலையில் ஊடகத்துறையில் தன்னை ஊடகவியலாளர்கள் என்று காட்டிக் கொள்ள எத்தனிக்கும் எம் சமூகத்தில் உள்ள, "வைக்கோல் பட்டறை நாய்கள்" போன்ற ஒரு சில அறப்படிச்ச மேதாவிகள்,  அரசியல் வாதிகளின் கைக்கூலிகள், அல்லக்கைகள், தன்னை சமூக அக்கறை கொண்டவர்கள் எனக் காட்டிக் கொள்ள நினைக்கும் சில மூடர்கள் மற்றும் புதிதாக நாளுக்குநாள் தோன்றும் அண்ட்ராய்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களின் முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் குழுமங்கள் போன்றவற்றால் எம் சமூகம் இன்னும் இன்னும் எத்தனை துன்பங்களையும், அவப் பெயர்களையும், நாசங்களையும் அடைந்து கொள்ளப் போகின்றதோ வல்ல இறைவன் ஒருவன்தான் நன்கறிவான்.

தனக்கு கிடைத்த எந்த செய்தியையும் அதன் உண்மைத் தன்மைகளையும் அதன் மூலம் எம் சமூகத்தில் ஏற்படப்போகும் பாரதூரமான விளைவுகளையும் கடந்து தனது சுய நலத்திற்காக செய்தி என்ற பெயரில் கண்டதையும் பகிரும் மற்றும் வெளியிடும் அவல நிலை இன்று எமது சமூக மட்டத்தில் அதிகரித்து காணப்படுவது மிகுந்த வேதனை பயற்கும் விடயமாகும்.

இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் ஊடகத்துறையில் தேர்ச்சி பெற்ற பல்லாண்டுகால அனுபவமிக்க எம் சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை செய்தியாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் இருந்த போதிலும் இன்றைய எமது சமூகத்தின் ஊடகத்துறையின் நிலை மிகவும் கேள்விக் குறியாக மாறியிருப்பதன் காரணகர்த்தாக்கள் யார்..?

சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய நிலை நம் அனைவருக்கும் உண்டு..?
ஊடகத்துறை என்ற கண்ணியமிக்க உயர்வான துறையில் இன்று எவ்வித பதிவுகளும் இல்லாத புல்லுருவிகளாக தோன்றியிருக்கும் கேடுகெட்ட ஒரு சிலரால் வெளியிடப்படும் போலியான முன்னுக்கு பின் முறான செய்திகளையும் சமூகம் சார்ந்த காட்டிக் கொடுப்புகளையும் தவிர்த்தால் ஒழிய எமக்கும் எமது சமூகத்திற்கும் விடிவுவென்பது கிடையவே கிடையாது.

அதேவேளை இவ்வாறான கேடுகெட்ட ஊடகவியலாளர்கள் என்று காட்டிக் கொள்ள நினைக்கும் சிலரையும் அதேவேளை முகநூல் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் போலியான சமூக அக்கறையற்ற விதத்தில் பகிரப்படும் செய்திகள் அனைத்தையும் நாம் பகிஸ்கரிப்பு செய்ய வேண்டிய அதேவேளை இவ்வாறான கேடுகெட்ட சிலரை சமூகத்தை விட்டு ஒதுக்கி வைக்க அந்தந்த ஊரைசேர்ந்தவர்கள் முன்வரவேண்டும். 

அதேவேளை இவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எமது சமூகத்தில் உள்ள தேர்ச்சி மிகு ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களின் அமைப்புகள் முன் வரவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
வல்ல இறைவன்தான் எம் சமூகத்தைப் இவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.

இது சமூகத்தின் பால் உள்ள அக்கறையில் வெளியிடப்பட்ட பதிவே தவிர யாரையும் புண்படுத்தும் விதமான பதிவல்ல..!!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :