கைதிகளுக்கு என்ரிஜன் பரிசோதனை


J.f.காமிலா பேகம்-

ஹர சிறைச்சாலையிலுள்ள அனைத்து கைதிகளுக்கும் கொவிட் என்ரிஜன் பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அடுத்த வாரம் முதல் இந்த பரிசோதனைகளை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மஹர சிறைச்சாலையில் சுமார் 2800ற்கும் அதிகமான கைதிகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1382ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் பரிசோதனைகளை விரைவில் நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :