காச நோயாளர்களை அடையாளப்படுத்துவதற்கான தேசிய அடைவுமட்ட இலக்கினை பொத்துவில் ஆதார வைத்தியசாலை அடைந்துள்ளது.
இதனையொட்டி அவ்வைத்தியசாலையில் காசநோய் தொடர்பில், நோயாளர் பரிசோதனை மற்றும் சிகிச்சைளித்தல் என திறன்பட செயற்பட்டவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இவ்வைத்தியசாலையில் திறன்பட செயற்பட்ட வைத்தியர்கள், சிரேஷ்ட பொதுச்சுகாதார ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்களான திருமதி ஏ.டள்ளியூ.மஸ்வூதா பேகம், மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்களான எம்.எம்.றிம்சான், எம்.ஏ.நயீம், கதிரியக்க தொழிநுட்பவியலாளர்கள்
,பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், வைத்திய அதிகாரிகளான டொக்டர் எம்.எம்.சமீம், டொக்டர் ஏ.எம்.இஸ்ஸடீன், டொக்டர் எம்.ஐ.எம்.றஹீம், உள்ளிட்ட பலர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment