சம்மாந்துறை பிரதேசத்தில் வறுமையான குடும்பத்தில் வசிக்கும் தந்தையை இழந்த மற்றும் தூரப்பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு குவைத் நாட்டின் அல்- நஜாத் தொண்டு நிறுவனம் மற்றும் ஸக்காத் பாஹில் ஆகியவற்றின் பணிப்பாளர் ஷேக் இஹாப் முகம்மத் அல்- தபூஷ் அவர்களின் அனுசரணையில் இலங்கை அந்-நூர் தொண்டு நிறுவனத்தினால் சம்மாந்துறை சது /அல்- அமீர் வித்தியாலயத்தில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை அந்-நூர் தொண்டு நிறுவனத்தின் தவிசாளர் எஸ்.எம். அலியார் ஹாஜியார், சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசியர் எஸ்.எல்.றியாஸ், உட்பட அந்-நூர் தொண்டு நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டு தந்தையை இழந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைத்தனர். மேலும் வசதி குறைந்த மக்களின் நன்மைகருதி குடிநீர் இணைப்புக்கள், வீடமைப்புக்கள், சுயதொழில் உதவிகள் போன்றவற்றையும் இவ்வமைப்பினர் தொடரந்து இலங்கை பூராகவும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment