கொரோனாவின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய ஜனவரியில் சர்வதேச நிபுணர் குழு சீனா செல்கிறது..

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

லகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் கடந்த வருட இறுதியில், சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்டது. இவ் வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர் குழுவொன்றை ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுப்பி வைக்கிறது.

இந்தக் குழுவினர் சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தோன்றியதாக கூறப்படும் இடங்களில் ஆய்வு செய்வார்கள் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர நடவடிக்கைகள் பிரிவு தலைவர் மைக்கேல் ரியான் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்..

‘இந்த சிறப்புக்குழுவின் முக்கிய நோக்கமே, வுஹான் நகரத்தில் மனிதர்களிடம் முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்வதாகும். எங்கள் அமைப்பிலுள்ள சீன குழுவினருடன் இணைந்து இந்த குழுவினர் பணியாற்றுவார்கள். 

அதேநேரம் இந்த பணிகளை சீன அதிகாரிகள் மேற்பார்வையிட மாட்டார்களென்றும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் வருகையை கொண்டாட வேண்டுமெனக்கூறிய மைக்கேல் ரியான், எனினும் அடுத்த 3 முதல் 6 மாதங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :