சவளக்கடையில் மீட்டரான வாழ்கை' கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

எம்.எம்.ஜபீர்-

வளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி, பஸ், லொறி உள்ளிட்ட சகல வாகனங்களுக்கு 'மீட்டரான வாழ்கை' எனும் தொனிப்பொருளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீரின் வழிகாட்டலில் சவளக்கடை பொலிஸ் நிலைய சமூக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பொலிஸ் பிரிவு ஆகியன இணைந்து சவளக்கடை சந்தியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டது.

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பொது வெளியில் நடமாடுவோர் ஒரு மீட்டர் தூர இடைவெளியினை கடைப்பிடிக்குமாறும் 'மீட்டரான வாழ்கை' எனும் வாசகம் கொண்ட ஸ்டிகர்கள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டது. அத்தோடு பொது மக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் முகக்கவசம் அணிவது தொடர்பாகவும் ஒரு மீட்டர் இடை வெளியை பேணுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இதில் சவளக்கடை பொலிஸ் நிலைய சமூக பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம். ஜௌபர், போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஜீ.ஏ.சேனாரத்தின, பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :