ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா கடந்த 2018ம் ஆண்டு வெளியேறியது. அப்போதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கே நீடித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்தும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தே வந்தது. இதன் காரணமாக ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனிடையே உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஈரானிலும் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியும் வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் கொரோனா தடுப்பு ஊசியை பெறுவதற்கான தங்களின் முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
இதுகுறித்து ஈரான் மத்திய வங்கியின் ஆளுனர் அப்டோல்நேசர் ஹேமதி ( Abdolnaser Hemmati ) கூறுகையில்:-
உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலம் கொரோனா தடுப்பூசியை பெறும் எங்கள் முயற்சிகளை அமெரிக்கா தடுக்கிறது.
அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையின் காரணமாக எழும் பணப்பரிமாற்ற பிரச்சினைகளால் கொரோனா தடுப்பூசி வாங்கும் எங்கள் முயற்சிகள் தடைப்பட்டுள்ளதென்றும், அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தலின் காரணமாகவும், ஈரானுக்கு மனிதாபிமான கடனை வழங்க சர்வதேச நாணய நிதியமும் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தா ர்.
0 comments :
Post a Comment