சம்மாந்துறையில் தீர்மானம் நிறைவேற்றம்.
நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸீம்-சம்மாந்துறை பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழு விஷேட கூட்டம் கடந்த திங்கட்கிழமை (14) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர் ,சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்நெளஷாட், உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக், பொலிஸார், திணைக்கள தலைவர்கள், சமயத் தலைவர்கள்,கோயில் பரிபாலண சபை பிரதிநிதிகள்,வர்த்தக சங்கத்தினர் உட்பட பலரின் பங்குபற்றலுடன் இடம் பெற்றது.
கொரோனா தொற்று நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களும் பொறுப்புவாய்ந்தவர்களும் அவற்றை கடைப்பிடித்து நடக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு கிராமமட்ட விழிர்ப்புணர்வு மற்றும் கண்கானிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து எமது பிரதேச மக்களை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற பிரதேசங்களில் இருந்து தற்காலிகமாக அல்லது குறுகிய கால விடுமுறை பெற்று வருபவர்களை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு தடை செய்தல்.
வியாபார "அனுமதி அட்டை"பெறாமல் வியாபார நடவடிக்களில் ஈடுபடும் வெளியூர்,உள்ளூர் வியாபாரிகளை பரிசீலனை செய்து நடவடிக்கை முன்னெடுப்படுப்பதற்கான செயற்பாடுகளில் ஒத்துழைப்பு செயற்படல்,
வியாபார நோக்கில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வெளி மற்றும் தூர இடங்களுக்கு சென்று வருபவர்களின் சுகாதார நடைமுறைகளை பரிசோதகர்களுடன் இணைந்து கண்காணித்தல்.
அத்தியவசிய பொருட்கள் தவிர்ந்த எந்தவொரு பொருளும் வியாபார நடவடிக்கைக்காக சம்மாந்துறை பிரதேச எல்லைக்குள் அனுமதிக்கப்படமாட்டது. என்பதோடு பாதையோர வியாபாரத்தில் ஈடுபடும் எந்தவொரு வியாபாரியும் தரித்து நின்று ஒரே இடத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் நடமாடி வியாபாரம் (தொலைபேசி மூலம்) செய்யும் முறைமையினை பின்பற்றல்
மேற்படி அறிவுறுத்தல்களை பேணி நடக்குமாறும் தவறும் பட்சத்தில் கடுமையான சட்டநடிவடிக்கைகளுக்கு முகக் கொடுக்க நேரிடும் எனும் தீர்மாளங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment