இத்தொற்றுக்கு ஆளான நோயாளிகள் அநுராதபுர மாவட்டத்திலுள்ள பதவியா, நாச்சதுவா, தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம மற்றும் இபலோகம பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளனர்.
லீஷ்மேனியாசிஸ் என்பது உலகின் 9ஆவது மிக ஆபத்தான தொற்று நோயாகும். 97 நாடுகளில் இத்தொற்று நோய் பரவியுள்ளது எனக்கூறப்படுகிறது.
இந்த நோய் மணல் பூச்சி மூலம் பரவுவதாக கூறப்படுகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவரை மணற்பூச்சி கடித்துவிட்டு, ஆரோக்கியமான இன்னொருவரை அது கடிக்கும்போது இந்த நோய் எளிதாகப் பரவுகிறது.
0 comments :
Post a Comment