இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு அரசாங்கம் சம்மதம் தெரிவித்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அரசாங்கம் விடுத்த. கோரிக்கையை மாலைதீவு அரசாங்கம் ஏற்றுக்கொண்டு பதிலளித்திருப்பதாகவும் வாராந்த செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதால் முஸ்லிம் மக்களிடையே கடும் கண்டனங்கள் எழும்பி உள்ளன.
இதனால் முஸ்லிம் மக்கள் பலரும் கொரோனா பரிசோதனையை நடத்த முன்வரவில்லை. இறப்புக்குள்ளான உடலங்களை மரணித்ததாக ஏற்றுக்கொண்டு, கையொப்பமிட்டு தகனம் செய்வதற்க்கும் பலர் மறுப்புத்தெரிவித்திருந்தனர்
இதனிடையே ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக, நீதியமைச்சர் அலிசப்ரி பதவியிலிருந்து விலகப்போவதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்ததாக இந்த ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது.
மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்வாக இலங்கை அரசாங்கம், மாலைதீவிடம் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக. மேலும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment