இலங்கை முஸ்லிம் ஆளுமைகள் ஒன்றிணைய வேண்டும் : அன்வர் நௌஷாத்

லங்கை முஸ்லிம்களின் சமகால பிரச்சனைகள் தொடர்பில் முஸ்லிம் ஆளுமைகள் ஒன்று பட வேண்டிய தருணம் இதுவே என முஸ்லிம் ஆளுமைகள் ஒன்றியத்தின் தலைவர் அன்வர் நௌஷாத் வேண்டும் கோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர் நோக்குகின்ற இச் சிக்கலான சந்தர்ப்பத்தை எதிர்கொள்வதற்கான ஆயத்தம் இதுவே என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஜனாஸா எரிப்பு தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் அனைத்தும் ஒரே வகையான கருத்துக்களையே கொண்டுள்ளன. இருப்பினும் ஒருமைப்பாடான ஒரு தளத்தில் அனைவரும் ஒன்று கூடி மக்களை வழி நடத்த வேண்டிய பொறுப்பை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு.

அரசியல் தலைவர்கள், ஆன்மீக இயக்கங்களின் தலைவர்கள், நிபுணத்துவ ஆலோசகர்கள், என அனைவரும் இணைய வேண்டிய தருணம் இதுவாகும்.

இங்கே அரசியல், பிரதேசவாதம், கருத்தியல் மற்றும் தனிப்பட்ட காழ்புணர்வு களையப்பட வேண்டும். ஒரு அணியாக செயற்படுவதன் அவசியம் நமது சமூகத்தினால் மிக அதிகமாக உணரப்படுகிறது.

ஜனசாக்கள் எரிக்கப்படுகின்றமையை தடுப்பதற்கான ஒரு தளமாக முஸ்லிம் ஆளுமைகள் இணைய வேண்டிய தளத்தையே குறிப்பிட வேண்டியுள்ளது. அத்துடன் நிலத்தொடர்பு இல்லாத நிலையில் வாழும் நமது பாதுகாப்பு குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நாட்டின் பிரபலங்கள் கூறிவரும் ஆருடங்கள் மிக ஆழமான கருத்துக்களை கொண்டுள்ளன.

நமது நாட்டின் பொருளாதாரத்தில் நமது மக்களின் பங்கு இன்றியமையாததாகும். இதை பலப்படுத்தி மக்களின் தேவைகளை நாளாந்த நடவடிக்கைகளுக்கு திருப்புவது தொடர்பில் சமூகத்தில் அதிகாரம் கொண்ட தலைவர்கள் தமது கவனத்தை குவிக்க வேண்டும். இதற்காக எமது ஆளுமைகள் ஒன்றியம் எவ்வகையான அர்ப்பணிப்புடனும் செயலாற்ற தயாராக உள்ளது என மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :