சென்னை தீவுத்திடலின் அருகேயுள்ள காந்திநகர் பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும்!
சென்னை தீவுத்திடலின் அருகேயுள்ள காந்திநகர் பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலச் செயலாளர் முகமது ரசீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தலைமைச் செயலகத்தின் பின்புறம் இருக்கும் கூவம் நதிக்கரையில் உள்ள காந்திநகர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்களான பூர்வகுடி மக்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 9 முதல் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரும்பாக்கம் பகுதிக்கு குடியேற்றம் செய்ய தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
தமிழக அரசின் இந்த செயலால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குழந்தைகளின் கல்வி, அவர்களது வேலை மற்றும் எதிர்காலமும் இதனால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மறு குடியமர்த்தல் திட்டத்தின்கீழ் அகற்றப்படும் மக்களை அவர்கள் வாழ்ந்த பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மறு குடியேற்றம் செய்ய வேண்டும் என்று விதிகள் உள்ளது.
அவ்வாறிருக்க 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மறு குடியேற்றம் செய்வது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதோடு சட்டவிதிகளுக்கு எதிரானதுமாகும்.
எனவே காந்திநகர் வாழ் பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பதோடு போராடி வருகின்ற அந்த மக்களுக்கு என்றும் துணை நிற்கும்.
தமிழக அரசு அப்புறப்படுத்தப்பட்ட மக்களை மீண்டும் அவர்களின் இருப்பிடத்திலேயே குடியிருப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தரவும், அங்கு வசிக்கும் மக்களின் எதிர்காலமும் உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை வைக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment