சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி உத்தியோகபூர்வமாக திருகோணமலைக்கு விஜயம்.



எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் -
சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலை கப்பல் துறை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை 24.12.2020 மேற்கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச ஆணையாளர் வைத்திய கலாநிதி R.ஸ்ரீதர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது கிழக்கு மாகாண சுதேச வைத்திய அபிவிருத்தி மற்றும் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் , வைத்தியசாலையையும் பார்வையிட்டு அதன் நிறைகுறைகளைக் மாகாண ஆணையாளரிடம் கேட்டறிந்துகொண்டார் . இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் , விசேட ஔடதம் ஒன்றினை அனைத்து பௌத்த விகாரைகளுக்கும் எடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்றிற்காக திருகோணமலைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்துள்ளார் . கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ளதா என 37 தேசிய ஔடதங்கள் தொடர்பில் பரிசோதனைகள் நடைபெற்று வரும் இந்நிலையில் , அனைத்து ஊடகங்களும் ஒரு தயாரிப்பிற்கு மாத்திரம் கவனத்தினை செலுத்தி வருகிறது.இதனை எண்னி நான் கவலை அடைவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் சுதேச வைத்திய நிலையங்களில் தயாரிக்கப்படுகின்ற மருந்து வகைகள் பல வகைகளில் நோய்களைக் குணமாக்கியிருக்கிறது . அதனை பலர் கண்டுகொள்ளாதது மேலும் வேதனையளிப்பதாகத் தெரிவித்த அவர் இன்னும் ஒரிரு நாட்களில் குறித்த பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அது தொடர்பில் தாம் ஊடகங்களுக்கு வெளியிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :