சென்னையில் கேம்பஸ் ப்ரண்ட் அமைப்பினர் போராட்டம்!தேசிய பொதுச் செயலாளர் ரவூப் ஷரீஃப்பை விடுதலை செய்ய வலியுறுத்தல்!!

கே
ம்பஸ் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் ரவூப் ஷரீஃப்பை விடுதலை செய்ய வலியுறுத்தி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடைபெற்றது.

சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சைதாப்பேட்டையில் இருந்து பேரணியாக புறப்பட்ட மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது அக்பர் அலி தலைமை தாங்கினார்.

மாநில தலைவர் அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டு ரவூப் ஷரீஃப் கைது செய்யப்பட்டதை கண்டித்து பேசினார்.

அவர் பேசியதாவது,
அண்மையில், சங்க பரிவாரின் சித்தாந்தங்களை எதிர்க்கும் கருத்தாளர்களையும், அரசியல் எதிரிகளையும், மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடும் நபர்களையும் வேட்டையாட மத்திய அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி வருகிறது. அரசு நிறுவனங்கள் சங் பரிவாரின் சிப்பாய்களாக மாறுவதைத் தடுக்கும் பொறுப்பு ஜனநாயகத்தை விரும்பும் அனைவருக்கும் உண்டு.

ரவூப் ஷரீஃப் கைது செய்யப்பட்ட பின்னர், அவரின் வீட்டில் அமலாக்கத் துறையால் நடத்தப்பட்ட சோதனையில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளபோதும், சட்டப்புறம்பான முறையில் கைது செய்திருப்பது என்பது சிஏஏ - என்ஆர்சி க்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதற்காக கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இது, அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிஏஏ - என்ஆர்சி யை அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக சங் பரிவாரை எதிர்க்கும் தலைவர்களையும், இயக்கங்களையும் அச்சுறுத்துவதற்கான பாஜகவின் நடவடிக்கையாகும்.

சிஏஏ - என்ஆர்சி க்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை வகித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை குறிவைப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் ரவூப் ஷரீபை விடுவிக்க வேண்டும் என்று கூறினார் .

சமூக நீதி மாணவ அமைப்பு பொருளாளர் அன்சாரி, மதிமுக மாணவர் அமைப்பு மாநில துணை செயலாளர் முகவை சங்கர், COTSO ஒருங்கிணைப்பாளர் தன்வீர், TYSF ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :