பிற நாடுகளின் முடிவை பொறுத்தே கொரோனா தடுப்பூசியை எமது மக்களுக்கு செலுத்துவோம்:-தென்கொரியா அறிவிப்பு!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டு வந்த நாடு தென் கொரியா. ஆனாலும் தற்போது தென் கொரியாவில் கொரோனா வைரசின் 2வது அலை பரவி வருகிறது.

இந்நிலையில் பிற நாடுகளின் முடிவைப் பொறுத்தே கொரோனா தடுப்பூசியை தென்கொரியர்களுக்கு செலுத்துவோம் என தென்கொரியா அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த தென்கொரியாவின் பிரதமர் சுங் சைக்யூன் கூறுகையில்:-
கொரோனா வைரஸ் பரவல் கடுமையாக இருக்கும் UK போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்த அனுமதித்து வருகின்றன. எங்கள் அரசாங்கத்தை பொறுத்தவரை எங்கள் குடிமக்களின் பாதுகாப்புதான் முக்கியம். பிற நாடுகளில் கொரோனாவுக்குரிய தடுப்பூசி மருந்துகளின் முடிவுகளை ஆராய்ந்தே வருகிறோம். அதனைத் தொடர்ந்து எங்களுடைய மக்களுக்கு கொரோனாவுக்குரிய தடுப்பூசியை வழங்க முடிவு செய்வோம். நாங்கள் இவ்விடயத்தில் கவனமாகவே இருக்கிறோம்” என கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :